Tamil - தமிழ்
டிரைவ் சோதனை தகவல் தமிழில்
‘மை-விக்-ரோட்ஸ்’ (myVicRoads) அக்கவுண்ட் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு இணைய-வழியில் இன்னும் பல வித செயற்பாடுகளை மேற்கொள்ளுங்கள்
உங்களுடைய வாகனப் பதிவுக் கட்டணத்தைச் செலுத்தவும், உங்களுடைய சாரதிப் பத்திரத்தைப் புதுப்பிக்கவும், உங்களுடைய வாகனத்தைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் அணுகிப் பெறவும், அல்லது உங்களைப் பற்றிய தகவல்களைப் புதுப்பிக்கவும் மிகவும் விரைவான வழி இணைய-வழியிலான ‘மை-விக்-ரோட்ஸ்’ (myVicRoads) கணக்கு ஒன்றின் மூலமாகவே ஆகும். இதில் சேர்வது இலவசம்!
‘மை-விக்-ரோட்ஸ்’ (myVicRoads) கணக்கு ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்
உங்களுடைய சந்திப்புவேளையின் பொழுது நீங்கள் கொண்டுவர வேண்டியவை
உங்களுடைய ‘பழகுநர் அனுமதி’ (Learner Permit) சோதனை ‘ஆபத்து அறி-திறன் சோதனை’ (Hazard Perception Test) அல்லது ‘வாகன-ஓட்டு சோதனை’ (Drive Test) ஆகியவற்றிற்காக ‘வாடிக்கையாளர் சேவை மையம்’ (Customer Service Centre) ஒன்றிற்குச் செல்லும் பொழுது நீங்கள் உங்களுடன் என்னவெல்லாம் கொண்டுவர வேண்டும் என்பதைப் பற்றிய தகவல்களை நீங்கள் இந்தப் பக்கத்தில் காண்பீர்கள்.
மொழிபெயர்த்துரைப்பாளர் அல்லது மொழிபெயர்ப்பாளர் ஒருவரைப் பயன்படுத்துதல்
ஆங்கிலம் அல்லாத வேறொரு மொழியில் நீங்கள் எம்முடன் பேச விரும்பினால், மொழிபெயர்த்துரைப்பாளர் அல்லது மொழிபெயர்ப்பாளர் ஒருவரை நீங்கள் உதவிக்காக அழைக்கலாம்.
மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவரை நான் எவ்வாறு பயன்படுத்தலாம்?
சந்திப்புவேளை ஒன்றை ஏற்படுத்திக்கொள்வதில், அல்லது படிவம் ஒன்றைப் பூர்த்தி செய்வதில் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், நீங்கள் உங்களுடைய குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது VicRoads அலுவலகம் ஒன்றிடம் இருந்து உதவி பெறலாம்.
VicRoads சோதனை ஒன்றில் அமர உங்களுக்கு மொழிபெயர்ப்பாளர் ஒருவரோ, உதவியோ தேவைப்பட்டால், VicRoads ‘வாடிக்கையாளர் சேவை மையம்’ (Customer Service Centre) (External link) ஒன்றிற்கு நீங்கள் செல்லவேண்டியிருக்கும், இந்த உதவிக்கான முன்பதிவினை எம்மால் உங்களுக்காகச் செய்ய இயலும்.
பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுகள்
பேச்சு அல்லது செவித்திறன் குறைபாடு ஒன்று உங்களுக்கு இருந்தால், உங்களுடைய சோதனைக்காக Auslan மொழிபெயர்ப்பாளர் ஒருவரை நீங்கள் பயன்படுத்தலாம்.
தொலைபேசி மூலம் எம்முடன் பேசுவதற்கு, National Relay Service (External link) மூலமாக எம்முடன் தொடர்புகொள்ளுங்கள்.
- TTY பயனர்கள் - 13 36 77 -ஐ அழைத்து 13 11 71 எனும் இலக்கத்துடன் தொடர்புகொள்ளவேண்டுமெனக் கேளுங்கள்
- Speak and Listen பயனர்கள் - 1300 555 727 -ஐ அழைத்து 13 11 71 எனும் இலக்கத்துடன் தொடர்புகொள்ளவேண்டுமெனக் கேளுங்கள்
உங்களுடைய ‘ஓட்டுநர் அனுமதிப்பத்திரம்’ (driver licence), ‘பழகுநர் அனுமதி’ (learner permit) அல்லது ஆவணங்களை மொழிபெயர்த்தல்
உங்களுடைய ஓட்டுநர் அனுமதிப்பத்திரமோ, ‘பழகுநர் அனுமதி’(learner permit)யோ ஆங்கிலத்தில் இல்லையெனில், NAATI அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளர் (External link) ஒருவர் மூலமாக, அல்லது ஆஸ்திரேலியாவிலுள்ள தகுந்த தூதரக அலுவலகம் ஒன்றின் மூலமாக அதை நீங்கள் அவசியம் மொழிபெயர்த்தாக வேண்டும்.
இதற்கான கட்டணங்கள் செல்லுபடியாகலாம்.
வெளிநாட்டு ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் ஒன்றின் மொழிபெயர்ப்பிற்காக, தற்போது செல்லுபடியாகும் ‘சர்வதேச ஓட்டுநர் அனுமதி’ (International Driving Permit) ஒன்றும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடும்.
எந்த நாட்டில் வெளிநாட்டு ஓட்டுநர் அனுமதிப் பத்திரத்திரம் வழங்கப்பட்டதோ அந்த நாட்டினால் ‘சர்வதேச ஓட்டுநர் அனுமதி’ வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
பரிந்துரைக்கப்படும் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்கள்
பின்வரும் NAATI அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளர்களை நாங்கள் சிபாரிசு செய்கிறோம்:
நேரடியான ‘பழகுநர் அனுமதி’ (Learner Permit) சோதனை
பின் வருவனவற்றைக் கொண்டுவர மறவாதீர்கள்:
- மேலே சொல்லப்பட்டுள்ள உங்களுடைய சந்திப்புவேளை உறுதிப்பாட்டின் பிரதி ஒன்று.
இது அச்சிடப்பட்டதாக இருக்கலாம், அல்லது உங்களுடைய தொலைபேசியில் உள்ளதை நீங்கள் காண்பிக்கலாம்.
- ‘ஓட்டுநர் அனுமதிப்பத்திர’(Licence)த்திற்கான அல்லது ‘பழகுநர் அனுமதி’ (learner permit)-க்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் PDF பிரதி ஒன்று
- உங்களுடைய அடையாளச் சான்றின் மூலப்படிவம்
- நீங்கள் விக்டோரிய மாநிலத்தில் வசிக்கிறீர்கள் என்பதற்கான ஆதாரச் சான்று. (Proof that you live in Victoria).
உங்களுடைய விக்டோரிய மாநில விலாசத்திற்கான ஆதாரச் சான்று (உதாரணமாக, வங்கி அறிக்கை, வீட்டுவசதிக் கட்டணச் சீட்டுகள் அல்லது வாடகை ஒப்பந்தம்) எதுவும் உங்களிடம் இல்லையேல், அனுமதிப்பத்திரத்திற்கான விண்ணப்பத்தில் இருக்கும் ‘விக்டோரிய வசிப்பிட உறுதிமொழி’ (Victorian residence declaration)-யில் யாராவதொருவரது கையொப்பத்தினைப் பெறுவதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
- உங்களுடைய வெளிநாட்டு அனுமதிப்பத்திரத்தின் மூலப்படிவம்
- உங்களுடைய அனுமதிப்பத்திரம் அல்லது ‘சர்வதேச ஓட்டுநர் அனுமதி’யின் NAATI அங்கீகாரம் பெற்ற ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்று (உங்களுடைய வெளிநாட்டு அனுமதிப்பத்திரம் ஆங்கிலத்தில் இல்லை என்றால் மட்டுமே இது தேவைப்படும்).
- உங்களுடைய கண்-கண்ணாடிகள் அல்லது ‘தொடு-வில்லைகள்’ (contact lenses) (கண்-பார்வைச் சோதனை ஒன்றில் தேர்ச்சி பெற இவை உங்களுக்குத் தேவைப்படும் என்றால்).
- மருத்துவ அறிக்கைகள் (medical reports) (External link) எதுவும் (மருத்துவ நிலை ஒன்று உங்களுக்கு இருந்தால், அல்லது வாகனம் ஓட்டுவதற்கான உங்களது திறனைப் பாதிக்கக்கூடிய பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் எதையும் நீங்கள் எடுத்துக்கொண்டிருப்பீர்களேயானால்).
- வேண்டப்படும் கட்டணச் செலுத்துத்தொகை (fees) (External link).
உங்களுடைய சோதனைகளுக்காக ஆயத்தம் செய்வது எப்படி
road to solo driving handbook அல்லது take a practice test (External link)-ஐ முற்றிலுமாக வாசியுங்கள்.
உங்களுடைய சந்திப்புவேளையை வேறொரு நேரத்திற்கு மாற்றிக்கொள்வது எப்படி
உங்களுடைய சந்திப்புவேளையை நீங்கள் புதியதொரு நேரத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தால், செல்லுபடியாகும் கட்டணம் ஒன்றுடன் 24 மணி நேர முன்னறிவிப்பு வேண்டப்படும்.
சந்திப்புவேளை ஒன்றை ஏற்படுத்திக்கொண்ட பிறகு, சந்திப்புவேளைகளுக்குப் பொறுப்பாய் உள்ளவரால் மட்டுமே அதை மாற்ற இயலும்.
உங்களுக்கு மருத்துவ-நிலை ஒன்று இருக்கிறதா?
வாகனம் ஓட்டுவதற்கான உங்களுடைய திறமையைப் பாதிக்கவல்ல பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை நீங்கள் உட்கொண்டுவந்தால், அல்லது மருத்துவ நிலை ஒன்று உங்களுக்கு இருந்தால், நீங்கள் அதை எமக்குத் தெரிவிக்கவேண்டும், அத்துடன் அதைப் பற்றிய மருத்துவ அறிக்கைக(medical reports)ளைக் கொடுக்கவேண்டும்.
சந்திப்புவேளைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள்
எமது வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் சுகாதாரம் மற்றும் பொதுநலனைப் பாதுகாக்கும் பொருட்டு சுகாதாரம் குறித்த கண்டிப்பான நெறிமுறைகள் எமது ‘வாடிக்கையாளர் சேவை மைய’(Customer Service Centre)ங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும்.
உடல் நலம் சரியில்லாதவர்கள் யாரும் சந்திப்புவேளை ஒன்றிற்கு வரக்கூடாது.
நேரடியான ஆபத்து அறி-திறன் சோதனை (Hazard Perception Test In-person)
பின் வருவனவற்றைக் கொண்டுவர மறவாதீர்கள்:
- மேலே சொல்லப்பட்டுள்ள உங்களுடைய சந்திப்புவேளை உறுதிப்பாட்டின் பிரதி ஒன்று.
இது அச்சிடப்பட்டதாக இருக்கலாம், அல்லது உங்களுடைய தொலைபேசியில் உள்ளதை நீங்கள் காண்பிக்கலாம்.
- உங்களுடைய ‘பழகுநர் அனுமதி’ (learner permit) அல்லது அடையாளச் சான்று
- உங்களுடைய வெளிநாட்டு அனுமதிப்பத்திரத்தின் மூலப்படிவம் (ஏற்றுக்கொள்ளப்படுமானால்).
- உங்களுடைய அனுமதிப்பத்திரம் அல்லது ‘சர்வதேச ஓட்டுநர் அனுமதி’யின் NAATI அங்கீகாரம் பெற்ற ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்று (உங்களுடைய வெளிநாட்டு அனுமதிப்பத்திரம் ஆங்கிலத்தில் இல்லை என்றால் மட்டுமே இது தேவைப்படும்).
உங்களுடைய சோதனைகளுக்காக ஆயத்தம் செய்வது எப்படி
எமது ‘ஆபத்து அறி-திறன் சோதனை’ (hazard perception practice test) (External link) ஒன்றை மேற்கொள்ளுங்கள்
உங்களுடைய சந்திப்புவேளையை வேறொரு நேரத்திற்கு மாற்றிக்கொள்வது எப்படி
உங்களுடைய சந்திப்புவேளையை நீங்கள் புதியதொரு நேரத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தால், செல்லுபடியாகும் கட்டணம் ஒன்றுடன் 24 மணி நேர முன்னறிவிப்பு வேண்டப்படும்.
சந்திப்புவேளை ஒன்றை ஏற்படுத்திக்கொண்ட பிறகு, சந்திப்புவேளைகளுக்குப் பொறுப்பாய் உள்ளவரால் மட்டுமே அதை மாற்ற இயலும்.
சந்திப்புவேளைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள்
எமது வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் சுகாதாரம் மற்றும் பொதுநலனைப் பாதுகாக்கும் பொருட்டு சுகாதாரம் குறித்த கண்டிப்பான நெறிமுறைகள் எமது ‘வாடிக்கையாளர் சேவை மைய’(Customer Service Centre)ங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும்.
உடல் நலம் சரியில்லாதவர்கள் யாரும் சந்திப்புவேளை ஒன்றிற்கு வரக்கூடாது.
வாகன-ஓட்டு சோதனை (Drive Test)
பின் வருவனவற்றைக் கொண்டுவர மறவாதீர்கள்:
- மேலே சொல்லப்பட்டுள்ள உங்களுடைய சந்திப்புவேளை உறுதிப்பாட்டின் பிரதி ஒன்று.
இது அச்சிடப்பட்டதாக இருக்கலாம், அல்லது உங்களுடைய தொலைபேசியில் உள்ளதை நீங்கள் காண்பிக்கலாம்.
- உங்களுடைய அடையாளச் சான்றின் மூலப்படிவம்.
- தகுந்த வாகனம் (suitable vehicle) ஒன்று.
- உங்களுடைய வெளிநாட்டு அனுமதிப்பத்திரத்தின் மூலப்படிவம்
- உங்களுடைய அனுமதிப்பத்திரம் அல்லது ‘சர்வதேச ஓட்டுநர் அனுமதி’யின் NAATI அங்கீகாரம் பெற்ற ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்று (உங்களுடைய வெளிநாட்டு அனுமதிப்பத்திரம் ஆங்கிலத்தில் இல்லை என்றால் மட்டுமே இது தேவைப்படும்).
- உங்களுடைய கண்-கண்ணாடிகள் அல்லது ‘தொடு-வில்லைகள்’ (contact lenses) (கண்-பார்வைச் சோதனை ஒன்றில் தேர்ச்சி பெற இவை உங்களுக்குத் தேவைப்படும் என்றால்).
- வேண்டப்படும் கட்டணச் செலுத்துத்தொகை (fees).
- நீங்கள் 21 வயதிற்குக் கீழ்ப்பட்டவர் என்றால், உங்களுடைய பூர்த்தி செய்யப்பட்ட ‘ஓட்டுநர் பயிற்சிப் பதிவேடு’ (logbook) அல்லது myLearners app (External link) எனும் செயலியில் நீங்கள் பூர்த்தி செய்திருக்கும் மணித்தியாலங்கள்.
உங்களுடைய சோதனைகளுக்காக ஆயத்தம் செய்வது எப்படி
‘வாகனம் ஓட்டு சோதனை’ சரிபார்ப்பு அட்டவணை’ (Drive Test checklist) (External link)-யை முழுதும் வாசியுங்கள்.
உங்களுக்கு மருத்துவ-நிலை ஒன்று இருக்கிறதா?
வாகனம் ஓட்டுவதற்கான உங்களுடைய திறமையைப் பாதிக்கவல்ல பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை நீங்கள் உட்கொண்டுவந்தால், அல்லது மருத்துவ நிலை ஒன்று உங்களுக்கு இருந்தால், நீங்கள் அதை எமக்குத் தெரிவிக்கவேண்டும், அத்துடன் அதைப் பற்றிய மருத்துவ அறிக்கைக(medical reports)ளைக் கொடுக்கவேண்டும்.
சந்திப்புவேளைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள்
எமது வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் சுகாதாரம் மற்றும் பொதுநலனைப் பாதுகாக்கும் பொருட்டு சுகாதாரம் குறித்த கண்டிப்பான நெறிமுறைகள் எமது ‘வாடிக்கையாளர் சேவை மைய’(Customer Service Centre)ங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும்.
உடல் நலம் சரியில்லாதவர்கள் யாரும் சந்திப்புவேளை ஒன்றிற்கு வரக்கூடாது.
அடையாளச் சான்று
அடையாள ஆவணங்களின் வகைகள்
வாகனம் ஒன்றைப் பதிவு செய்யும்பொழுது, அல்லது உங்களுடைய அனுமதிப்பத்திரத்தைப் பெறும்பொழுது உங்களுடைய அடையாளச் சான்று ஒன்றை நீங்கள் கொடுக்கவேண்டியிருக்கலாம்.
உங்களுடைய அடையாள ஆவணத்தினை உறுதிப்படுத்துவதற்காக நீங்கள் ‘வாடிக்கையாளர் சேவை மையம்’ (Customer Service Centre) ஒன்றிற்கு வந்தாக வேண்டும்
சரியான ஆவணங்கள் இல்லாமல் உங்களுடைய விண்ணப்பத்தினை உங்களால் பூர்த்தி செய்ய இயலாது.
எனக்குத் தேவைப்படும் அடையாள ஆவணங்கள் யாவை?
எவ்வொரு விண்ணப்பத்துடனும் நீங்கள் பெரும்பான்மையான தருணங்களில் கொடுக்கும் ஆவணம்:
- ‘வகை A’ -யைச் சேர்ந்த அடையாள ஆவணச் சான்று ஒன்று (விண்ணப்பதாரிக்கும் அவருடைய அடையாளத்திற்கும் இடையே இருக்கும் தொடர்பிற்கான சான்று. உதாரணமாக, கடவுச்சீட்டு அல்லது முழு ஆஸ்திரேலியப் பிறப்புச் சான்று – அசல் மூலப்படிவங்கள் தேவை, படப்-பிரதிகள் அல்லது சான்றளிக்கப்பட்ட பிரதிகள் அல்ல)
- ‘வகை B’ -யைச் சேர்ந்த அடையாள ஆவணச் சான்று ஒன்று (சமூகத்தில் இந்த அடையாளம் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான சான்று. உதாரணமாக, Medicare அட்டை அல்லது வங்கி அட்டை)
- விக்டோரிய மாநில வசிப்பிடச் சான்று (‘வகை A’ அல்லது ‘வகை B’-ஆவணங்களில் உங்களுடைய விலாசம் காண்பிக்கப்பட்டிருக்காவிட்டால்)
- பெயர் மாற்றத்திற்கான சான்று (‘வகை A’ மற்றும் ‘வகை B’ ஆவணங்களில் உள்ள பெயரிலிருந்து உங்களுடைய பெயர் மாறுபட்டிருந்தால்)
பொய்யான மற்றும் / அல்லது தவறான பாதையில் இட்டுச்செல்லக்கூடிய தகவல்கள் அல்லது ஆவணங்களைக் கொடுப்பது Road Safety Act 1986 மற்றும் / அல்லது Marine Safety Act 2010 ஆகிய சட்டங்களின் கீழ் பாரதூமான குற்றமாகும், மற்றும் இதன் விளைவாக உங்களுக்கு அபராதம் அல்லது சிறைவாசம் விதிக்கப்படலாம்.
அப்படிப்பட்ட தகவல்கள் அல்லது ஆவணங்களை நீங்கள் கொடுத்ததன் காரணமாக அளிக்கப்பட்ட எவ்வொரு அதிகாரம் அல்லது அங்கீகாரம் மீளப் பெறப்படலாம், அத்துடன் அது செல்லுபடியாகாமல் போகலாம்.
ஏற்றுக்கொள்ளப்படும் அடையாள ஆவணங்கள்
உங்களுடைய ‘வகை A’ மற்றும் ‘வகை B’ ஆவணங்களில் உள்ள பெயரானது உங்களுடைய குடும்பப் பெயர் மற்றும் உங்களுடைய முழு முதல் பெயர் ஆகியவற்றை அதே வரிசையில் காண்பிக்கவேண்டும்.
- உங்களுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட முதல் பெயர் (given name) இருந்தால், இந்த முதல் பெயர் இரண்டு ஆவணங்களிலும் இருக்கவேண்டும்.
- உங்களுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட குடும்பப் பெயர் (surname) இருந்தால், அனைத்துப் பெயர்களும் இரண்டு ஆவணங்களிலும் இருக்கவேண்டும்.
இன்னொரு நபர் அல்லது நிறுவனத்தின் சார்பாக செயல்படல்
இன்னொருவர் சார்பாக வாகனம் ஒன்றைப் பதிவு செய்வதற்கு கையெழுத்து இடப்பட்ட ‘முகவராய் செயல்படுவதற்கான அதிகாரம் [PDF 253 Kb]’ (Authority to Act as an Agent form [PDF 253 Kb]) (External link) எனும் படிவம் ஒன்று உங்களுக்குத் தேவைப்படும்.
மேலதிகத் தகவல்களுக்கு ‘இன்னொருவர் சார்பாகப் பதிவு செய்யுங்கள்’ (Register on behalf of someone else) (External link) எனும் பக்கத்திற்குச் செல்லுங்கள்.
‘வகை A’ ஆவணங்கள்
‘வகை A’ ஆவணங்கள் உங்களுடைய குடும்பப் பெயர், முதல் பெயர் மற்றும் உங்களுடைய பிறந்த திகதி ஆகியவற்றைக் காண்பிக்கவேண்டும்.
இந்த ஆவணங்கள் நடப்பில் உள்ளவையாக இருக்கவேண்டும், அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் காலாவதியானவையாக இல்லாமல் இருக்கவேண்டும்.
ஏற்றுக்கொள்ளத்தக்க ‘வகை A’ஆவணங்கள்
- புகைப்படம் உள்ள ஆஸ்திரேலிய ஓட்டுநர் அனுமதிப் பத்திரம், அல்லது புகைப்படம் உள்ள ‘பழகுநர் அனுமதி’ (learner permit) அட்டை.
- புகைப்படம் உள்ள விக்டோரிய மாநில ‘கடல்-சார் அனுமதி அட்டை’ (marine licence photo card).
- புகைப்படம் உள்ள விக்டோரிய மாநில ‘துப்பாக்கி அனுமதி அட்டை’ (firearm licence photo card).
- புகைப்படம் உள்ள விக்டோரிய மாநில ‘பாதுகாவலர்/நெரிசல் கட்டுப்பாட்டலுவலர் அனுமதி அட்டை’ (Security Guard/Crowd Controller photo card).
- ஆஸ்திரேலியக் கடவுச்சீட்டு.
- வெளிநாட்டுக் கடவுச்சீட்டு ஒன்று (இது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் காலாவதியானது என்றால், தற்போது செல்லுபடியாகும் ஆஸ்திரேலிய விசாவுடன் அது இருந்தால்).
- Passport Office -இனால் வழங்கப்பட்ட அடையாளச் சான்று.
- Passport Office -இனால் வழங்கப்பட்ட ‘மாநாட்டுப் பயண ஆவணம்’ (Convention travel document).
- Passport Office -இனால் வழங்கப்பட்ட அடையாள ஆவணம் (இது பொதுவாக ‘நார்ஃபொக் தீவு’ (Norfolk Island)-இற்குச் செல்லும் பயணிகளுக்கு வழங்கப்படும்.
- புகைப்படம் உள்ள ஆஸ்திரேலிய காவல்துறை அதிகாரி அடையாள அட்டை.
- Department of Foreign Affairs and Trade -இனால் வழங்கப்பட்ட புகைப்படம் உள்ள தூதரக அலுவலக அடையாள அட்டை.
- ‘பிறப்புகள், இறப்புகள் மற்றும் திருமணங்கள் பதிவக’(Registry of Births, Deaths and Marriages)த்தினால் கொடுக்கப்பட்ட முழு ஆஸ்திரேலிய பிறப்புச் சான்று (குறிப்பு: பிறப்புப் பதிவின் பகுதிகள் மற்றும் ‘நினைவுப் பிறப்புச் சான்று’(Commemorative birth certificate)கள் ஆகியன ஏற்றுக்கொள்ளப்படாது).
- ‘ஆஸ்திரேலியக் குடியுரிமை-வழங்கல் சான்று’ (Australian naturalisation certificate) அல்லது ‘குடியுரிமைச் சான்று’ (citizenship certificate), அல்லது ‘ஆஸ்திரேலியப் பயண ஆவணம்’ (Document for Travel to Australia), அல்லது Department of Immigration and Citizenship அல்லது Passport Office -இனால் வழங்கப்பட்ட ImmiCard ஒன்று (காலாவதியானதாக இருந்தால், இரண்டு ஆண்டுகளுக்குள்ளானதாக இருக்கவேண்டும்).
- NSW புகைப்பட அட்டை (NSW RMS -இனால் 14 டிசம்பர் 2008-இற்குப் பிறகு வழங்கப்பட்டது).
தயவுசெய்து கவனிக்க: பொய்யான மற்றும் / அல்லது தவறான பாதையில் இட்டுச்செல்லக்கூடிய தகவல்கள் அல்லது ஆவணங்களைக் கொடுப்பது Road Safety Act 1986 மற்றும் / அல்லது Marine Safety Act 2010 -இன் கீழ் பாரதூமான குற்றமாகும், மற்றும் இதன் விளைவாக உங்களுக்கு அபராதம் அல்லது சிறைவாசம் விதிக்கப்படலாம்.
அப்படிப்பட்ட தகவல்கள் அல்லது ஆவணங்களை நீங்கள் கொடுத்ததன் காரணமாக அளிக்கப்பட்ட எவ்வொரு அதிகாரம் அல்லது அங்கீகாரம் மீளப் பெறப்படலாம், அத்துடன் அது செல்லுபடியாகாமல் போகலாம்.
‘வகை B’ ஆவணங்கள்
பின் வரும் ஆவணங்களில் செல்லுபடியாகும் ஒன்று.
- மாநில அரசு அல்லது கூட்டரசுப் பணியாளருக்கான புகைப்படம் உள்ள அடையாள அட்டை.
- Medicare அட்டை.
- Department of Veterans Affairs அட்டை.
- Pensioner Concession அட்டை.
- Commonwealth -இனால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் ‘உரிம அட்டை’ (entitlement card)
- மாணவ-மாணவி அடையாள அட்டை.
- ஆஸ்திரேலிய அல்லது வெளி நாட்டு (‘க்ரெடிட் கார்டு) அல்லது ஒரு வங்கி, கட்டட சங்கம் அல்லது ‘க்ரெடிட் யூனியன்’ கணக்கு அட்டை.
- ‘குழந்தைகளுடன் பணியாற்றல் – சோதனை’ (Working with Children Check) அட்டை.
- ஆஸ்திரேலிய ‘வயதுச் சான்று’ அட்டை
- ஆஸ்திரேலிய Keypass அட்டை.
- புகைப்படம் உள்ள Australian Defence Force அடையாள அட்டை (குடிமைப் பணியாளர்கள் (excluding civilian staff) நீங்கலாக)
அல்லது
பின் வரும் ஆவணங்களில், ஒரு வருடத்திற்கு மேல் ஆகாத ஒன்று (மின்னணு சாதனங்களில் (உதாரணமாக, மொபைல் தொலைபேசி அல்லது ‘டேப்ளட்’ ஆகியவற்றில்) உள்ள அறிக்கைகள்) மற்றும் இண்ட்டெர்நெட்-இல் இருந்து அச்சிடப்பட்ட அறிக்கைகள் ஆகியன ஏற்றுக்கொள்ளத்தக்கவை):
- வங்கி அல்லது நிறுவனத்தின் பெயர் அல்லது முத்திரையுடன் கூடிய கணக்குப்-புத்தகம் அல்லது கணக்கு அறிக்கை
- நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி உள்ள தொலைபேசி, எரிவாயு அல்லது மின்சாரக் கட்டணச் சீட்டு
- ATO, Centrelink, வங்கி மற்றும் Medicare ஆகியவற்றிடமிருந்து வந்த நிறுவனத்தின் பெயர் அல்லது முகவரியுடன் கூடிய அஞ்சல் தாள்களில் எழுதப்பட்ட கடிதங்கள்.
அல்லது
பின் வரும் ஆவணங்களில், இரண்டு வருடத்திற்கு மேல் ஆகாத ஒன்று:
- தண்ணீர்க் கட்டணங்கள், ‘நகரவைக் கட்டணங்கள்’ (council rates) அல்லது ‘நில மதிப்பீட்டு அறிவிப்பு’ (land evaluation notice)
- வாக்காளர் அட்டை, அல்லது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டிருப்பதற்கான சான்று
- ஆயுதப் படைகளில் இருந்து வெளி-விடுவிப்பு (discharge) செய்யப்பட்டதற்கான ஆவணச் சான்று
- புகைப்படம் உள்ள தற்போது செல்லுபடியாகும் Victorian Driving Authority அடையாள அட்டை.
‘வகை C’ ஆவணங்கள் – முகவரி மாற்றம்
விக்டோரிய மாநிலத்தில் நீங்கள் வசிக்கும் இடத்தின் முகவரி காண்பிக்கப்படவில்லை என்றால், அல்லது உங்களுடைய ‘வகை A ‘ அல்லது வகை B’ ஆதார ஆவணங்களில் உள்ள முகவரியில் இருந்து அது மாறுபட்டிருந்தால், பின் வரும் ஆவணங்களில் ஒன்று உங்களுக்குத் தேவைப்படும்:
- உங்களுடைய தற்போதைய முகவரியைக் காண்பிக்கும் விற்பனை ஒப்பந்தம், வாடகைப் பத்திரம், அல்லது வாடகை ஆவணம்
- ஓட்டுநர் அனுமதிப் பத்திரம் அல்லது வாகனப் பதிவு ஆகியவற்றைப் புதுப்பிப்பதற்கான தற்போதைய அறிவிப்பு
- Australian Taxation Office Assessment (கடந்த அல்லது தற்போதைய நிதி-ஆண்டிற்கானது)
- உங்களுடைய தற்போதைய முகவரியைக் காண்பிக்கும் ‘வகை A’ அல்லது வகை B’-யைச் சேர்ந்த வேறொரு ஆவணம்
உங்களுடைய விக்டோரிய மாநில வசிப்பிடத்திற்கான சான்றினை உங்களால் இப்போதும் நிரூபிக்க இயலவில்லை என்றால், பின் வரும் வகையிலான ‘சுட்டுநர் கூற்று’ (referee statement) ஒன்றினை நீங்கள் கட்டாயம் கொடுக்கவேண்டும்:
குறைந்தபட்சமாக 12 மாதங்களுக்கு உங்களைத் தெரிந்திருக்கும் விக்டோரிய மாநில ஓட்டுநர் பத்திரம் வைத்திருக்கும் ஒருவரால் கையொப்பம் இடப்பட்டிருக்கவேண்டும், மற்றும் பரிந்துரை அளிப்பவருடைய பெயர், அனுமதிப்பத்திர இலக்கம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை அது உள்ளடக்கியிருக்க வேண்டும்.
‘பழகுநர் அனுமதி’ (learner permit)-யில், அல்லது அனுமதிப்பத்திர விண்ணப்பத்தில் இந்த வாக்குமூலம் ஏற்படுத்தப்படலாம்.
‘வகை D’ ஆவணங்கள் – பெயர் மாற்றம்
‘வகை A’ மற்றும் ‘வகை B’ ஆதார ஆவணங்களில் உங்களுடைய பெயர் வேறாக இருந்தால், பின் வரும் ஆவணங்களில் ஒன்று உங்களுக்குத் தேவைப்படும்.
- ‘பிறப்புகள், இறப்புகள் மற்றும் திருமணங்கள் பதிவாளர்’ (Registrar of Births, Deaths and Marriages) ஒருவரால் ஆஸ்திரேலியாவில் வழங்கப்பட்ட திருமணச் சான்று.
- விவாக-ரத்து ஆவணங்கள் (சம்பந்தப்பட்ட பெயர் இதில் காண்பிக்கப்பட்டிருக்கவேண்டும்).
- Deed Poll (நவம்பர் 1986-இற்கு முன்பாக விக்டோரிய மாநிலத்தில் வழங்கப்பட்டது).
- ‘பெயர் மாற்றுச் சான்று’ (Change of name Certificate) (நவம்பர் 1986-இல் அல்லது அதற்குப் பிறகு விக்டோரிய மாநிலத்தில் வழங்கப்பட்டது).
ஒரு நிறுவனத்திற்கான அடையாள ஆவணங்கள்
நிறுவனம் ஒன்றிற்காக வாகனம் ஒன்று பதிவு செய்யப்பட(registered)வேண்டுமேயானால், பின் வருவனவற்றில் ஒன்று தேவைப்படும்:
- ‘ஆஸ்திரேலிய நிறுவன இலக்கம்’ (Australian Company Number (ACN))
- பதிவு செய்யப்படும் பொழுது, ஆஸ்திரேலிய நிறுவனம் ஒவ்வொன்றும் ‘ஆஸ்திரேலிய நிறுவன இலக்கம்’ (Australian Company Number) என்று சொல்லப்படும் தனிப்பட்ட ஒன்பது இலக்க அடையாள எண் ஒன்றைப் பெறும்.
இந்த நிறுவனத்தினால், அல்லது அதன் சார்பாக வழங்கப்படும், கையெழுத்து இடப்படும், அல்லது வெளியிடப்படும் ஒவ்வொரு பொது ஆவணத்திலும் இந்த இலக்கம் இருக்கவேண்டும்*. அல்லது
- ‘பதிவுச் சான்று’ (Certificate of Registration)
- ACN-ஐப் போல ASIC எனும் அமைப்பும் பதிவு (registered) செய்யப்பட்ட ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ‘பதிவுச் சான்று’ (Certificate of Registration) ஒன்றை வழங்குகிறது, அல்லது
- ‘ஒன்றிணைப்புச் சான்று’ (Certificate of Incorporation).
* ‘ஆஸ்திரேலிய வர்த்தக இலக்கம்’ (Australian Business Number (ABN)) என்பது ACN -இல் இருந்து வேறுபட்டதாகும்.
ACN என்பது Australian Taxation Office உடனும் மற்ற அரச முகமைகளுடனுமான காரியங்களில் பயன்படுத்தப்படுவதற்காக உள்ள பதினோரு இலக்க எண் ஆகும்.
ஆஸ்திரேலியாவில் தொழில் புரியும் பதிவு செய்யப்பட்ட (registered) நிறுவனங்களும், வர்த்தகங்களும் ABN ஒன்றிற்காக விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: ஒரு அமைப்பானது ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பு என்பதற்கு ‘ஆஸ்திரேலிய வர்த்தக இலக்க’ங்கள் (Australian Business Numbers (ABNs)) ஏற்றுக்கொள்ளத்தக்க சான்றாக அமையாது
நிறுவனம் ஒன்றின் சார்பாக செயல்படுவதற்கு
பின் வருவனவற்றை நீங்கள் கட்டாயமாகக் கொடுக்கவேண்டும்:
- அடையாள ஆவணத்தின் ‘வகை A’ அல்லது ‘வகை B’ சான்று
- ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனத்தின் ‘முகவரி இடப்பட்ட அஞ்சல் தாள்’(letterhead)-இல் நிறுவனத்தின் இயக்குநரால் அல்லது நிறுவனத்தினால் கொடுக்கப்பட்ட அதிகாரமளிப்புக் கடிதத்தின் மூலப்படிவம் ஒன்று.
இதில் பின் வரும் தகவல்கள் உள்ளடங்கியிருக்க வேண்டும்:
- ‘அஞ்சல் தாள்’ (letterhead)-இல் நிறுவனத்தின் முழுப் பெயர் மற்றும் முகவரி
- ‘ஆஸ்திரேலிய நிறுவன இலக்கம்’ (Australian Company Number (ACN)) அல்லது ‘ஒருங்கிணைப்புச் சான்று’ (Certificate of Incorporation)
- நிறுவனத்தின் சார்பாகச் செயலாற்றும் நபரது பெயர்
- நிறுவனத்தின் சார்பாக ஆற்றப்படக்கூடிய காரியங்களின் அட்டவணை (உதாரணமாக, பதிவைப் புதுப்பித்தல்).
நிறுவனத்திடம் ‘முகவரி இடப்பட்ட அஞ்சல் தாள்’ (letterhead) இல்லையேல், ‘முகவராய்ச் செயலாற்றுவதற்கான அதிகாரம் - படிவம் [PDF 253 Kb]’ (Authority to Act as an Agent form [PDF 253 Kb] (External link)) ஒன்று ஏற்றுக்கொள்ளத்தக்கதாகும்.
பின் வரும் செயல்பாடுகளை இன்னொருவர் சார்பாகச் செய்ய இயலாது:
- சோதனை ஒன்றை மேற்கொள்ளல்
- ‘வேலை நாள்-குறிப்பேடு’ (work diary) ஒன்றை வாங்குதல்
- புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொள்ளல்.
உபயோகமுள்ள இணைப்புகள்